Sunday, Feb 9, 2025

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

By Jet Tamil

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களிளும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு