தென்கொரிய ஜனாதிபதி அதிரடியாக கைது
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (15.1.2025) புதன்கிழமை அதிகாலை, பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், அவர் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள்
கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் அறியப்படும்போது,
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையில், ஜனவரி 3 ஆம் திகதி அவர் கைது செய்ய முயற்சிக்கப்பட்டிருந்தாலும், அவரது ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அந்த நேரத்தில் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் பிறகு, புதன்கிழமை அதிகாலை யூன் சுக் இயோலின் வீட்டுக்குச் செல்லும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.
6500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், போராட்டங்களை நடத்தி, பதாகைகளுடன் human chain (மனித சங்கிலி) போராட்டம் நடத்தினார்கள். பெரும்பாலான போராட்டக்காரர்கள் வயதானவர்கள் என குறிப்பிடப்படுகிறது.