Welcome to Jettamil

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கர ஏவுகணை தாக்குதல்

Share

லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 80 ற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் ஏவப்பட்டாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படையினர் ஐந்து ஹிஸ்புல்லா உறுப்பினர்களை கொன்றனர். இதில் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் ஹிஸ்புல்லாவின் ரட்வான் கொமாண்டோ படையின் தளபதி ஆகிய முக்கியஸ்தர்களும் அடங்குவர்.

இதற்கு பதிலடியாகவே ஹிஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே நான்கு நாட்கள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை