Welcome to Jettamil

வெற்றிலைக்கேணியில் கோர விபத்து – இருவருக்கு பலத்த காயம்

Share

வெற்றிலைக்கேணியில் கோர விபத்து – இருவருக்கு பலத்த காயம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 பட்டாரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இருவர் பலத்த காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில நாட்களுக்கு முன்பு இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த அதே இடத்தில் குறித்த விபத்தும் இடம்பெற்றுள்ளது

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலீசார் விபத்து தொடர்பாக  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை