Sunday, Jan 19, 2025

ஜனாதிபதி அனுர வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக வெளியேற வேண்டும் – பொன் சுதன்!

By kajee

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறிதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலுல் இல்லங்களிலிருந்து வெளியேறி மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

இன்று வடமராட்சி பகுதியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும்.

எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்தவர்களை புதைத்த இடகக்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு