சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும்,
இது தொடர்பான முறையான அறிவிப்பு நாளை (01) வெளியிடப்பட உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர்-நிலை ஒப்பந்தங்கள் IMF இன் நிர்வாகம் மற்றும் அதன் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்ட அதிகாரிகள் குழுவிற்கும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஆரம்பமானது.
அங்கு ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் உட்பட பல அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு கடன் வழங்கிய கடனாளிகளுக்கு வேலைத்திட்டம் வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.