கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (08) வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
கடந்த கால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன் போது, கிளிநொச்சி மாவட்ட விவசாய பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயம் காப்புறுதி, மாகாண விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், விதை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பில் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன