Welcome to Jettamil

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை” சஞ்சிகை வெளியீடு

Share

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை” சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு, கடந்த 05.12.2023 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில், விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மண்தின நிகழ்வின்போது நடைபெற்றது.

“அறுவடை” சஞ்சிகையை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்கள் வெளியிட்டுவைக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

“அறுவடை” சஞ்சிகையின் மதிப்பீட்டுரையை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயக்குமார் வழங்கினார்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளிட்ட பயளாளிகளுக்கு பயன்தரும்வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இச் சஞ்சிகையை தொடர்ந்து காலாண்டு இதழாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வின்போது உரையாற்றிய விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ குறிப்பிட்டார்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை