கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் பின்னர், அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒரு சில பெரிய அளவிலான வர்த்தகர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த நிலைமை தொடர்பில் பாவனையாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.