Welcome to Jettamil

அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களின் விலை

Share

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரிக்கக் கூடுமென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய யுத்த சூழ்நிலையில் கப்பல்கள் சுயஸ் கால்வாயில் பயணிப்பதால் அபாய காப்புறுதி கட்டணத்தை அக் கப்பல் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை