Welcome to Jettamil

வறட்சி நிலைமை அதிகரிப்பு –  நீர் விநியோகிப்பதில் சிக்கல்

Share

நாட்டில் நிலவும் வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்துள்ளார்.

அவற்றில் 32 நீர் விநியோக மத்திய நிலையங்கள் அபாய மட்டத்தில் காணப்படுகின்றன என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசங்கள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு நேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் கொள்கலன் தாங்கிகள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெப்பமான காலநிலையினால் ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, அம்பாறை, குருணாகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை