தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஜனாதிபதி வேட்பாளர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டவர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈக்வடாரில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலில் வேட்பாளர்களாக 8 பேர் போட்டியிடவிருந்த நிலையில், அவர்களில் ஒருவரான பெர்ணான்டோ விலாவிசென்ஸியோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளரான இவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் களம் இறங்கிய பெர்ணான்டோ விலாவிசென்ஸியோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனது காருக்கு திரும்பிய போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பொலிஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், தலைநகரில், ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 6 பேரை கைது செய்துள்ளனர். 6 பேரும் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.