யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர தின பேரணி!
இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான பேரணி வைத்தியசாலை வீதி ஊடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.
நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கர வண்டி பவனி என்பவற்றை உள்ளடக்கி இந்த பேரணி நடைபெற்றது.