இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த உண்மைகள் மீளாய்வு செய்யப்பட்டு, அனைத்து துறைகளிலும் இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இங்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையொன்றையும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.