Sunday, Jan 19, 2025

யாழ். பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் தாக்கம் தொடர்பில் தகவல்

By jettamil

யாழ். பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் தாக்கம் தொடர்பில் தகவல்

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Point Pedro Hospital) எலிக்காய்ச்சல் என சந்தேகப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலை 1-2 தினங்களில் மேலும் சீராகி, நோயாளிகள் சேர்க்கப்படுவதில் குறைவு ஏற்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்களின் கூறுகையில், “மக்கள் தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளை தக்கபடி பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்ததும் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும். இதனால் நோய் மேலும் தீவிரமாகவும், இறப்புகளும் ஏற்படாமல் தடுக்க முடியும்” என தெரிவித்தனர்.

இப்போது வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 66 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 32 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு