Sunday, Jan 19, 2025

குரங்குகளுக்கு கருத்தடை – அநுர அரசின் புதிய திட்டம்

By jettamil

குரங்குகளுக்கு கருத்தடை – அநுர அரசின் புதிய திட்டம்

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டம் மாத்தளை மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க (Gamagedara Dissanayake) தெரிவித்தார். அவர், மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதனைப் பகிர்ந்தார்.

இந்த முன்னோடி திட்டத்திற்கு 4.5 மில்லியன் ரூபா நிதி விவசாய அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார். குரங்குகளுக்கு கருத்தடை செய்யும்போது, கால்நடை வைத்தியர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படும்.

இத்திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு