புளி வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!
சந்தையில் புளி (Tamarind) குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் என்ற சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இவ்வாறு விலை அதிகரித்துள்ளது. 350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட புளி தற்போது 2,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலத்தில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்த பற்றாக்குறை நிலவுமென்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.