இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் உலகப் பெருமஞ்சத் திருவிழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் உலகப் பெருமஞ்சத் திருவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
எம்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் திரு மஞ்சத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அங்கு மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. இந்த காட்சியை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ்ந்தனர்.