ரஷ்ய ஜனாதிபதி புடினை ‘போர்க் குற்றவாளி என பைடன் அழைப்பது மன்னிக்கக் கூடிய விடயமல்ல என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கு ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக்கூடியதும் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.