Welcome to Jettamil

சமையல் எரிவாயுவை  இன்று முதல் விநியோகிக்கும் நடவடிக்கை  

Share

இன்று முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை  முன்னெடுக்கப்படுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பாகங்களிலும்,  எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை இன்றளவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்து 3, 500 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டன.

எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் டொலர் கொடுப்பனவை செலுத்த  அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்தே குறித்த எரிவாயு தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளொன்றுக்கு 120, 000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இதனால் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் கிரமமாக குறைவடையும்  என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை