யாழ் மாநகர சபையின் கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் யேசுபாலன் பிறப்பின் கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாநகரசபை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.அன்ரன் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில் முன் பள்ளி சிறார்களின் கிறிஸ்தவ கலைநிகழ்வுகள், நத்தார் நாடகமும், நத்தார் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்வும் இடம்பெற்றதுடன் புனித நத்தார் தாத்தாவின் ஆடல் பாடல் உடன் வருகை தந்த யுடன், சிறார்களின் ஆடல்பாடல்களும் இடம்பெற்றன.
இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதம கணக்காளர் ம.வசந்தமாலா, யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி த.பாலமுரளி, யாழ்ப்பாண மாநகர சபை பிரதம பொறியயிலாளர் இ.சுரேஸ்குமார், யாழ்ப்பாண மாநகர சபை பிரதி ஆணையாளர் வே.ஆயகுலன், யாழ்ப்பாண மாநகர சபை செயலாளர் த.தயாளன், யாழ்ப்பாண மாநகரசபை பிரதம நூலகர் சி.அனுசியா, மாநகர உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.