Welcome to Jettamil

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்கள் இணைந்து வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை: வைத்தியசாலை பணிப்பாளர்

Share

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்கள் இணைந்து வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை: வைத்தியசாலை பணிப்பாளர்

வட மாகாணத்தில் அதிகூடியதாக வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்குக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரன் அவர்களின் முயற்சியினால் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து இம்மாதம் பதினோராம் திகதி ஆரம்பமான சத்திர சிகிச்சை முகாம் 21 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது. 1253 பேர் கண் சத்திர சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

கடந்த 11 ஆம் திகதி 188 பேரும், 12 ஆம் திகதி 230 பேரும், 13 ஆம் திகதி 172 பேரும், 14 ஆம் திகதி 153 பேரும், 18 ஆம் திகதி 172 பேரும், 19 ஆம் திகதி 56 பேரும், 20 ஆம் திகதி 157 பேரும், 21 ஆம் திகதி 125 பேரும் என கடந்த 8 நாட்களில் 1253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வட மாகாணத்தில் ஒரு தடவையில் அதிகளவானர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த சத்திர சிகிச்சைகளை ஆறு பேர் கொண்ட கண் சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதுடன், இதில் மூவர் இந்தியாவை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் ஆவார். மேலும், இலங்கையை சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்களான சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் கசுன் குணவர்த்தன, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் பி.கிரிதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் நிஸ்மா ராசிக் ஆகிய குழுவினர் இச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சிகிச்சையானது முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பயனாளிகளை அழைத்து வருவதற்கும் வாகன ஒழுங்குகளும் முற்றிலும் இலவசமாகவே ஒழுங்கு படுத்தப்பட்டது. நோயாளிகள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர். நோயாளிகளுக்கு உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

இதற்கான நிதி இலங்கை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மலேசியாவை சேர்ந்த அலகா மற்றும் ஆனந்தா அறக்கட்டளைகள் முழுமையாக வழங்கியிருந்தன. இந்த சிகிச்சை முகாம் மூலம் இரண்டு கண்களும் பார்வையற்ற சில நோயாளிகளுக்கு மீண்டும் உலகைப் பார்க்கக் கூடியதாக வீடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை