தமிழர்களின் பாரம்பரியமான தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது.
ஆகவே இப் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
யாழ் வடமராட்சி நெல்லியடி பகுதி கடைகளிலும் மற்றும் யாழ்ப்பாண கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள்,
பொங்கலுக்கு தேவையான இதர பொருட்கள் , பட்டாசுகளை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.