Friday, Jan 17, 2025

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா யுக்ரைனுக்கு விஜயம்

By Jet Tamil

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.

அதன்படி, இந்திய விஜயத்தின் பின்னர், நேற்று  (21) போலந்து வந்தடைந்த ஜப்பானிய பிரதமர், தொடரூந்தில் யுக்ரைன் நோக்கிப் புறப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு G7 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் யுக்ரைனுக்கு விஜயம் செய்திருந்தனர், ஆனால் ஜப்பானிய தலைவர் மட்டும் யுக்ரைனுக்கு விஜயம் செய்யவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானிய பிரதமர் ஒருவர் தீவிரமான போர் வலயத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு