Friday, Jan 17, 2025

நாட்டை வெற்றிப்பாதைக்கு உயர்த்துவதே நோக்கம் என்கிறார்  ஜனாதிபதி ரணில்

By Jet Tamil

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த கொழும்பு ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற 32 ஆவது இன்டரெக்ட் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு புனித தோமஸ் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, விசாகா கல்லூரி மற்றும் கண்டி உயர் பெண்கள் கல்லூரி ஆகியன ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியிலுள்ள பல பாடசாலைகளைச் சேர்ந்த 700 இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கடந்த 07 மாதங்களில் தமது அணியினர் முடிந்ததை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தற்போது வங்குரோத்து நாடாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு