Welcome to Jettamil

கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ஜீவன் தொண்டமான் கோரிக்கை – சுமந்திரன் ஆதரவு

Share

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்கு, மெய்நிகர் முறையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில்,

“பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது.

இனிமேலும் பாதிப்பு அல்லது அழிவுகள் ஏற்படுவதற்கு முன்னதாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ஒரு மெய்நிகர் கட்சித் தலைவர்கள் கூட்டம் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் இந்தப் ருவிட் பதிவுக்கு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வரவேற்புத் தெரிவித்துள்ளார். “நானும் இதை ஆதரிக்கிறேன். கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட அதே நேரத்தில் மெய்நிகர் கூட்டம் இன்று நடத்தப்பட வேண்டும்” என்று சுமந்திரன் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை