Welcome to Jettamil

கல்வியங்காட்டில் வாள்வெட்டு – இரண்டு பேர் படுகாயம்

Share

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் உள்ள நேற்று மாலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக, நேற்று மாலை 6.40 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய இரண்டு பேரே வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ இடத்துக்குப் சென்றனர் என்றும் கூறப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை