பாராளுமன்ற அமர்வு நேரலை நிறுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.குறித்த அமர்வுகள் இன்று
நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எதிர் காட்சியினால் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதுடன் அது தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற நேரலை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்ற நேரலை நிறுத்தப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,நாடாளுமன்றம் இப்போது நடக்கிறது! ஏன் என்று யோசிப்பவர்களுக்கு,இன்று நேரலையில் இல்லை, அங்கு வெளிப்படையாக இணையம் இல்லையா? அல்லது சதி உள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.