Welcome to Jettamil

கட்டுநாயக்க – கொழும்பு நீர்வழி விமான சேவை: இன்று முதல் ஆரம்பம்

Share

கட்டுநாயக்க – கொழும்பு நீர்வழி விமான சேவை: இன்று முதல் ஆரம்பம்

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்புப் பேர ஏரி ஆகியவற்றுக்கு இடையேயான நீர்வழி விமான சேவை இன்று (அக்டோபர் 3, 2025) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பேர ஏரியை (Beira Lake) விமான தளமாகப் பயன்படுத்தும் இந்தச் சேவை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் கொழும்பு மையப்பகுதிக்கும் இடையேயான பயணத்தை எளிதாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடக்க நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

சின்னமன் ஏர்லைன்ஸ் (Cinnamon Airlines) நிறுவனம் இந்தச் சேவையை நடத்துகின்றது.

முதல் பயணத்தின்போது, துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதிஅமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவாக்கு, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன உட்படப் பல சிறப்பு விருந்தினர்கள் பயணம் செய்தனர்.

வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயண வசதிக்காக இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரில் தரையிறங்கும் இலகுரக விமானங்கள் (Seaplanes) இந்தச் சேவைக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன. தொடக்கப் பயணமாக, ஒரு செஸ்னா 208 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு சின்னமன் லேக்சைடு (Cinnamon Lakeside) இறங்குதளத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை