எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார். அதன் பின்னர் மீண்டும் நாட்டுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இருப்பினும் மகனின் பாதுகாப்பிற்காக. அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார்.
தனது சிறந்த பங்களிப்பை பிறந்த தாய்நாட்டிற்கு தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.





