எரிபொருள் இன்மையால் பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர் ஹரித அலுத்கே இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் .
எந்தவொரு வேலைநிறுத்தத்திலும் இதுவரை கலந்து கொள்ளாத சிறுவர் வைத்தியசாலையும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.





