நுகர்வோருக்கு விநியோகித்த வெற்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்ற லாப்கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக லப்கேஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.