Sunday, Feb 9, 2025

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

By Jet Tamil

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்று 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு