Welcome to Jettamil

திருகோணமலையில் தொடரும் மர்மம்: மலை உச்சியில் இருந்த புத்தர் சிலை திருட்டு!

Share

திருகோணமலையில் தொடரும் மர்மம்: மலை உச்சியில் இருந்த புத்தர் சிலை திருட்டு!

திருகோணமலை, சேருநுவர காவல் எல்லைக்குட்பட்ட தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று (10) காலை மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6 ஆம் திகதி குறித்த மலை உச்சியில் இருந்த புத்தர் சிலை முதன்முதலில் திருடப்பட்டது.

முதலாம் சிலை திருடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் புதிதாக வைக்கப்பட்ட மற்றொரு சிலையும் இன்று சனிக்கிழமை காலை இனந்தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு சிலைகள் திருடப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சேருநுவர காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாரால், எந்த நோக்கத்தில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பது குறித்துச் சேருநுவர காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை