நாகப்பட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தாமதம்!
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவையை இன்று முதல் மீண்டும் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கப்பல் சேவையை மீண்டும் தாமதம் செய்யவேண்டியதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அவர், இந்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்படும் என கூறினார்.