போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும்.
இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும்.
இச் செயலியை இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் www.police.lk பதிவிறக்கம் செய்யலாம்.