Welcome to Jettamil

நாடளாவியரீதியில் நேற்றையதினம் (09) இடம்பெற்ற மீலாதுன் நபி விழா

Share

அகிலம் போற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடளாவியரீதியில் நேற்று (09) மீலாதுன் நபி விழா இடம் பெற்றது.

இதனை கொண்டாடும் முகமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயலில் சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் காலை 9.00 மணிக்கு பள்ளிவாசல் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் பண்டார ,பௌத்த மதகுரு, இந்து சமய குருக்கள்,பள்ளிவாயல் சம்மேளனத் தலைவர் எச்.தாலிப் அலி மௌலவிமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு நற்பண்புகள் முதலான விடயங்கள் பேசப்பட்டன. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை நீங்க விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றன.

இதனையடுத்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இதேவேலை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை