Welcome to Jettamil

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

Share

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

பெறுமதிசேர் வரி திருத்தங்களின் கீழ் பெட்ரோல் விலை 10% அதிகரிக்கும் என அதிபர் அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனவரி மாதம் முதல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 7.5% வரியை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, VAT பதினெட்டு வீதத்தால் அதிகரிக்கப்பட்டாலும், பெட்ரோல் விலை 10.5% மட்டுமே அதிகரிக்கும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை