திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ். குகதாசன் ,சட்டத்தரணி துஷ்யந்தன் , மத்தியஸ்த சபை தவிசாளர் புவநேந்திரன் மற்றும் நகரசபை செயலாளர் என பலர் கலந்துகொண்டார்கள்.
இதன் போது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கலைநிகழ்வும் இடம்பெற்றது.
செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்கள் இந்நிறுவனத்தின் ஆலோசகர் பாலா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிட்ட தக்கது.