கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய புகையிரத சேவையானது மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையிலிருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும்.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும். அத்துடன் இந்த புகையிரதத்தில் 530 பயணிகள் பயணிக்க முடியும்.