Welcome to Jettamil

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

Share

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எந்த காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை, 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள்.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள், ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என இதன்போது தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை