Welcome to Jettamil

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிய தீர்மானம்

Share

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு    தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை  மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக மக்கள் தமது கருத்துகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்க முடியும் என்பதோடு, அதன் பின்னர் மக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்டறியப்படவுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வேண்டுகோளை இலங்கை மின்சார சபை முன்வைத்ததாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை