இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 3000 மெற்றிக் தொன் டீசல் விநியோகம் செய்யப்படுவதால் இன்று மின்சாரம் தடைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நூரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்தமை மற்றும் நாளாந்தம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளைப் பெறுவதற்கு டொலர்கள் தட்டுப்பாடுபோன்ற காரணங்களால்,
அண்மைக்காலமாக நாட்டில் மின்வெட்டுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன .
அமைச்சர் காமினி லொக்குகேமின்வெட்டு இருக்காது என ஊடகங்கள் முன்னிலையில் தொடர்ச்சியாக தெரிவித்த போதிலும் கடந்த சில நாட்களாக மின்வெட்டு தொடர்ந்த வண்ணமே உள்ளது .
இந்த நிலையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கும் 3,000 மெற்றிக் டன் டீசலை தரையிறக்கும் நடவடிக்கை நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலைமைக்கு மத்தியில், இன்றைய தினமும் மின் துண்டிப்பை அமுலாக்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதநிலையில் கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால்,
இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.