Welcome to Jettamil

புதிய அதிகசக்தி வாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதனை

Share

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய, அதிகசக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா நேற்று பரிசோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணை ஆயிரத்து 100 கிலோ மீற்றர் தொலைவுக்கு பறந்து சென்றுள்ளது என்றும்,  6 ஆயிரம் கிலோ மீற்றர் உயரத்திற்கு பறந்து சென்று  ஒரு மணிநேரம் பறந்த பின்னர், ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்துள்ளது என, ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை ஏவுகணையானது ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவுக்கு செல்லும் திறன் பெற்றது. 

கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர், முதன்முறையாக, தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என்று தென்கொரியாவும் கூறி உறுதி செய்துள்ளது.

இந்த சோதனையானது ஐ.நா.வின் விதிகளை மீறிய செயல் என தென்கொரிய ஜனாதிபதி மூன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை