தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு சட்டரீதியாக உதவிகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பதிலுரை ஆற்றினார்.
இதன்போது அவர், “இலங்கை தமிழர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கும் சூழலில் அண்மையில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள், அமைச்சர்களிடம் எப்படி கையாள்வது என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்கும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.