தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதால், அதனுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகளையும், இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி 18 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாகவும், பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதேபோல, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பரீட்சை நிறைவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.