மதுரை மாவட்டத்தில் பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 21 மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுக்காலை 8 மணியளவில் ஆரம்பித்து, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. போட்டியில் 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக காளைகளை அடக்கி அவர் முதல் பரிசுகளை வென்றுள்ளார்.
அதேவேளை, திருச்சி பெரியசூரியூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இன்று சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 2 பேர் பலியாகினர்.