2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது, பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் உயர்தரப் பரீட்சை டிசம்பர் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
டிசெம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.