எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் 100 ரூபாவிலிருந்து 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
எரிவாயு விலையை கணக்கிடும் சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 246 ரூபாவினால் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, தற்போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், எரிவாயு விலை குறைந்துள்ள போதிலும், உணவகங்களில் உணவு விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.