யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி கடுகதி புகையிரத்ததுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்துள்ளது.
இன்று மதியம் 12.30 மணியளவில் வனவாசலை பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புகையிரதத்தில் மோதிய மோட்டார் வாகனம், சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று தீப்பிடித்தது.
புகையிரதத்தின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் இணைந்து அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.